Wednesday, February 13, 2019

உடல் சோர்வு நீங்க:




🍵 குளிர்ந்த நீரில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து, அதிகாலை வேளையில், சில நாட்கள் தொடர்ந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.

🍵 முருங்கைகீரையை காம்புடன் ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் அசதி குறையும்.

🍵 பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.

🍵 ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன், மிளதுத்தூள் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் சோர்வு குறையும்.


🍵 கம்பை கூழாக்கி அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடையலாம்.

🍵 உலர்ந்த திர்ட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம், முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

🍵 பேரிச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, ஊறிய பேரிச்சம் பழத்தையும், அந்த தண்ணீரையும் குடிக்க சோர்வு குறையும்.

🍵 அகத்திக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெற்று சுறுசுறுப்புடன் இருக்கும்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .