Wednesday, February 13, 2019

உங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு? அதுக்கு என்ன அர்த்தம்? தெரிஞ்சிக்கோங்க!




சிறுநீர், மலம் என்பது நம் உடலில் இருந்து தேவையற்ற கழிவுப் பொருட்களாக வெளியேற்றப்பட்டாலும், அதை வைத்து நம்முடைய உடலில் உள்ள நோய் பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும். அதனால் தான் நாம் மருத்துவமனைக்குச் சென்றால் உடனடியாக ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மலப்பரிசாதனை ஆகியவற்றுக்குப் பரிந்துரைக்கிறார்கள

அதில் சிறுநீரைப் பொருத்தவரை, அது வெளியாகும் நிறத்தை வைத்தே உடலில் எந்த உறுப்புகளில் நோய்த் தொற்றுக்ள இருக்கும் என்பதைக் கண்டுபிடித்விட முடியும்.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 7 முறை சிறுநீர் கழிப்பது சாதாரண இயல்பான ஒன்று தான். அதைவிட அதிகமாகவோ குறைவாகவுா சிறுநீர் கழித்தல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியக் குறைபாடாக உள்ளது என்பது பொருள்.

ஒருவரின் சிறுநீரின் நிறத்தை வைத்தே அவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.

⚪️ வெள்ளை

வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், சுத்தமாக உள்ளது என்றும் அவர்களின் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது

💡 வெளிர் மஞ்சள்

வெளிறிய மஞ்சள் நிறத்தில் சிறுநீர்6 கழித்தால், அது அவர்களின் உடம்பில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளதை வெளிப்படுத்துகிறது.

🔶 அடர் மஞ்சள்

மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், அது அவர்களின் உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது என்பதன் அறிகுறி.

🏷 பழுப்பு சிறுநீர்

பழுப்பு நிறத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தால், அது கல்லீரல் தொற்று மற்றும் அவர்களின் உடம்பில் பழைய ரத்தம் உள்ளது என்று பொருள்

🔴 சிவப்பு அல்லது பின்க்

தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வருகிறது என்றும் சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோய் பிரச்சனை உள்ளது என்றும் அர்த்தம்.

🔵 நலம் அல்லது பச்சை

நீலம் அல்லது பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேற்றப்பட்டால், அது அவர்கள் தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் மற்றும் உணவில் அதிகப்படியான சாயம் கலந்திருக்கிறது என்பதைக் குறிக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது, இனிப்பு வாசனை தென்பட்டால், அது அவர்களுக்கு நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .