Saturday, July 23, 2011

இன்று ஒரு தகவல் 43 – இதயத் துடிப்பை அறியும் சுறா மீன்கள் !!!

னைவருக்கும் வணக்கம் இன்று ஒரு தகவலின் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . இன்றைய இன்று ஒரு தகவலை தொடங்குமுன் அனைவரிடமும் ஒன்று சொல்லியாக வேண்டும் கடந்த இரண்டு வாரங்களாக சற்று வேலை பளு அதிகமாகிப்போனதால் . நண்பர்கள் பலரின் பதிவுகளை வாசித்து மறுமொழி கொடுக்க இயலாத நிலையில் இருந்தேன் .அதற்காக மிகவும் வருந்துகின்றேன் . எதையும் எதிர்பாராது வழமைபோல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் மதிப்பளித்து தினமும் மறுமொழிகள் மற்றும் ஓட்டுகள் வழங்கி ஊக்குவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் .!
 நண்பர்களே இன்றைய இன்று ஒரு தகவலில் வழமை போல் இல்லாமல் மிகவும் சிறிய தகவல் ஒன்றை உங்கள் அனைவருக்கும் இன்று தரப்போகிறேன் . நம் எல்லோருக்கும் சுறா மீன்களை நன்றாகத் தெரியும் தெரியாது என்று சொல்பவர்கள் இங்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள் . சரி இப்பொழுது நான் விஷயத்திற்கு வருகிறேன் . மீன்களிலே இந்த சுறா மீன்கள்தான் அனைவரையும் அச்சுறுத்தும் மீன் வகைகளில் முதன்மை வகிக்கின்றன . இந்த மீன்கள் பொதுவாக மனிதர்கள் மற்றும் தினமும் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும்  மீன்களின் இருபிடங்களை எளிதில் கண்டுபிடித்துவிடும் திறமை அதிகம் பெற்றிருக்கின்றனவாம் .
 பலருக்கு இந்த சுறா மீன்கள் எப்படி மனிதர்கள் இருக்கும் இடங்கள் மற்றும் மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்களை சரியாக அறிந்துகொள்கின்றன என்ற மிகப்பெரிய சந்தேகம் தோன்றலாம் . சொல்கிறேன் உலகத்தில் எந்த ஒரு   மீன் இனத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சுறா மீன்களுக்கு இருக்கிறதாம் . அதுதான் இதயத் துடிப்பை உணரும் சிறப்பு . ஆம் நண்பர்களே இந்த சுறா மீன்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீந்தும் மனிதர்கள் மற்றும் மீன்களின் இதயத் துடிப்பை உணர்ந்து எளிதில் அந்த இருப்பிடத்தை அடைந்து தங்களுக்குத் தேவையான உணவுகளை தினமும் பிடித்துக் கொள்கின்றனவாம் . என்ன நண்பர்களே இன்றைய குட்டித் தகவல் உங்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .