Monday, August 1, 2011

மனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் : அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு  காரணம் மனித மூளையின் சக்திதான் .
இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற  மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்)  தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள் .
ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது .
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .
நரம்பு உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்"  மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும்  மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார் .
மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள்  மூளையில்  இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை  பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால்  கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக  பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார் .
சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும்  (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .
இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .
இதைத்தான்  நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .
நன்றி : Dailymail ,UK.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .