ஜனவரி முதல் மார்ச் --- உணவு வேட்டை ,அதன் மூலம் அதன் இனபெருக்க காலத்திற்கு தேவையான சக்தியை சேமித்தல்.
ஏப்ரல் மாதம் ---- இந்த ஒரு மாத காலத்தில் , கடற்கரை பகுதிகளில் இருந்து முட்டை இடுவதற்கு பாதுகாப்பான இடம் நோக்கி நகர்தல்.
மே மாதம் ---- கலவியில் ஈடுபடுதல்
ஜூன் முதல் ஜூலை ---முட்டைகள் ஈனும் பருவம் மற்றும் ஆண் பெங்குவின்கள் முட்டையை அடை காத்தல்.இந்த கால கட்டத்தில் பெண் பெங்குவின்கள் உணவை தேடி சென்று விடுகின்றது .
ஆகஸ்ட் மாதம் --- முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளி வரும் பருவம்,இந்த நேரத்தில் உணவை தேடி சென்ற பெண் பெங்குவின்கள் திரும்ப ஆரம்பிக்கிறது.
செப்டம்பர் முதல் அக்டோபர் ---- குஞ்சுகளுக்கு உணவு தருதல் ,முதற்கட்ட வளர்ச்சி தொடங்குகிறது .
அக்டோபர் முதல் நவம்பர் ---- குஞ்சுகள் அனைத்தும் குழுவாக இணைந்து வெப்பத்தை உருவாக்கி கொள்கின்றன.
டிசம்பர் மாதம் --- குஞ்சுகளை விட்டு பெங்குவின்கள் பிரிந்து சென்றுவிடுகிறது .இந்த நேரத்தில் பனிக்கட்டிகள் உடைந்து நீரை உண்டாக்குகின்றன ,குஞ்சுகள் அதன் வளர்ச்சியையும், உணவையும் தானே அடைகின்றன .
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .