அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ஆஃபர் விலையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று முதல் (பிப்.,12) வரும் 14ம் தேதிவரை 3 நாட்கள் அதிரடி ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் ஆப்பர்களை அறிவுத்துள்ளது. ஒப்போ ஆர்15 புரோ, ஒப்போ ஆர்17, ஒப்போ ஆர்17 புரோ, ஒப்போ எஃப் 9 புரோ ஆகிய முன்னணி மாடல்கள் இந்த 3 நாட்கள் ஆஃபர் விலையில் விற்கப்படுகின்றன. இதுகுறித்த தகவல்களைப் பார்ப்போம்.
ஒப்போ ஆர்15
குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது ஒப்போ ஆர்15 புரோ. விலை- 25,990.
ஒப்போ ஆர்17 புரோ
விலை- ரூ. 45,990. இது 8 ஜிபி ராம் திறன் கொண்டது. டச் ஸ்கிரீன் அதிவேகத்தில் இயங்கும். உங்களது பழைய போன்களை 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் எடுத்துக் கொள்கிறது. இதன் ஸ்னாப் டிராகன் 710 பிராசஸர் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை லேக் இல்லாமல் இயக்க உதவுகிறது.
ஒப்போ ஆர்17
இதன் விலை ரூ. 31,990. உங்களது பழைய போன்களை 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் எடுத்துக் கொள்கிறது.
ஒப்போ எஃப் 9 புரோ
விலை- ரூ. 21,990. 64 ஜிபி, 128 ஜிபி (ரூ. 23,990) என இரு வேரியண்ட்களில் இது வெளியாகியுள்ளது. ரு. 3000 வரை உங்களது பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம்.
ஒப்போ ஏ3எஸ்
பட்ஜெட் பிரியர்கள் விரும்பும் ஸ்மார்ட்போன் இது. விலை- ரூ. 8,990. இதன் 2 ஜிபி ராம், 6.2 இன்ச் அகண்ட் திரை, 4230 எம் ஏஹெச் பாட்டரி உள்ளிட்டவை பலரை கவர்ந்துள்ளன.
இதன் 3 ஜிபி ராம் வேரியண்ட் ரூ, 10,990 விலையில் வெளியாகியுள்ளது.
ரூ. 1500 வரை இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .