அறிவு ஜீவி!
நாம் பிறரை விளையாட்டாக கிண்டலும் கேலியும் செய்வதற்கே “அறிவு ஜீவி” என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்துவோம். ஆனால், உண்மையிலே இந்த பெயருக்கு ஏற்ற சிறந்த மனிதர் சாணக்கியர் தான். வாழ்க்கையை அணு அணுவாக பிளந்து புரிதலுடன் பலவித கருத்துக்களை கூறியுள்ளார்.
உயிரும் உடலும்!
100 ஆண்டு காலம் வாழ்வது எளிமையான ஒன்று தான். ஆனால், அதற்காக நம் உடலையும், மனதையும் தயார் செய்வது தான் மிக முக்கியமான விஷயம்.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் உடலுக்கும் உயிருக்கும் ஒரு வித இணைப்பு எப்போதுமே இருக்கும். இந்த இணைப்பு தான் நம்மை உயிர்ப்புடன் வைக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
மனம்!
உடலை நம் விருப்பத்திற்கு பணிய வைக்க வேண்டுமென்றால் முதலில் மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
எப்போதுமே எதிலும் உறுதி கொள்ள வேண்டும். இதை அடைவது நீங்கள் நினைப்பது போல மலையை தூக்கும் விஷயம் அல்ல. இது மிக எளிதான ஒன்று. “சுயம்” இந்த ஒன்று தான் உங்களை ஆட்டி படைக்கும் ஒரு கருவி.
எண்ணங்கள்
செய்கின்றது ஒன்றுமாக, சொல்கின்றது ஒன்றுமாக எப்போதுமே இருக்க கூடாது. இது வாழ்க்கையை இருள் சூழ செய்து விடும். இதற்கு உங்களின் மனதின் குரலை ஆழ்ந்து கேட்க வேண்டும்.
தினமும் உங்களுக்காக 30 நிமிடம் ஒதுக்கி உங்களை பற்றி, உங்கள் சுயத்தை பற்றி சிந்தியுங்கள் என சாணக்கியர் கூறுகிறார். இந்த பயிற்சி கட்டாயம் உங்கள் எண்ணங்களை மாற்றி அமைக்கும்.
மூளை!
மனித உடலில் மூளையின் எடை வெறும் 2% மட்டுமே. ஆனால், இது நம் உடலில் இருந்து 20 சதவிகிதத்திற்கும் மேலாக ஆற்றலை பெற்று கொள்கிறது. இதனால் நம் மனதின் வேலை கூடுதலாகிறது.
இன்றைய கால கட்டத்தில் இந்த சதவிகிதம் சற்று அதிகமாகி உள்ளது. உடல் உழைப்பை விட மூளையின் உழைப்பு தான் அதிகமாக உள்ளது. மூளை என்பது நம் மனதின் சாயல் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என சாணக்கியர் தெளிப்படுகிறார்.
கவலை
இன்றைய கால கட்டத்தில் கவலை இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்ல வேண்டும். சின்ன தோல்வியோஅல்லது சிறு மன கசப்போ ஏற்பட்டால் உடனடியாக வாழ்வில் எதோ இடி விழுந்தது போல நினைக்காதீர்கள். “இதுவும் கடந்து போகும்” என்கிற மனநிலை தான் உங்கள் வாழ்க்கையையும் உங்களையும் உந்தும் சக்தி.
உடல்!
மனதை தயார் செய்த பிறகு அடுத்த வேலையாக நமது உடலை தான் நாம் தயார் செய்ய வேண்டும். பணம் சம்பாதித்தால் மட்டும் போதாதது.
நம் உடல் ஆரோக்கியம் அந்த பணத்தை விட விலை மதிப்பற்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். கால மாற்றம் முக்கியம் தான், ஆனால் அதற்காக கண்ட உணவுகளை சாப்பிட்டு நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள கூடாது என சாணக்கியர் கூறுகிறார்.
பயிற்சி
உடல் உழைப்பு இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டாலும், நாம் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட கூடாது.
மனம் மட்டும் தனியாக வேலை செய்தால் அது ஆரோக்கியமாவது. மனதுடன் சேர்த்து உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லையேல் இரண்டுமே பாதிக்கப்படும்.
உங்களுக்காக!
சாணக்கியர் பல கருத்துகளை இது போல கூறி இருந்தாலும், மேற்சொன்ன கருத்துக்கள் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ வழி செய்கின்றன.
இதில் அவர் சுருக்கமாக கூறும் கருத்து இதுதான், ” மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பிணைய பட்டுள்ளது”, இவை இரண்டையும் சம நிலையில் யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற இயலும் என உரக்க சொல்கிறார்.
அறிவு ஜீவி டாக்டர் அம்பேத்கர் தான் என்னோட கருத்து, ஐயின்ஸ்ட்டின், தந்தை பெரியார்
ReplyDelete