ஸ்மார்ட் போன்களில் அவ்வப்போது வெளிவரும் விளையட்டுக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப்ளூவேல் கேம் பெரம் வைரலாக பரவியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற பெரும் அதிர்ச்சி எல்லாம் கிளம்பியது.
இதனால் அரசு இந்த விளையாட்டை விளையாட தடை விதித்தது. அதையும் மீறி சிலர் விளையான்டு தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் பின் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு இந்த விளையாட்டு மீதான மக்களிடையே உள்ள ஆர்வம் ஒரளவிற்கு குறைந்தது.
இந்நிலையில் தற்போது புதிதாக இளைஞர்களின் மனதை கெடுக்க வந்துள்ள விளையாட்டு பப்ஜி. இந்த விளையாட்டு லைவ்வாக மற்றவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே விளையாடும் விளையாட்டு என்பதால் இதை விளையாடுபவர்களை இதற்கு அடிமையாக்கி விடுகிறது. இப்படியாஜ பப்ஜிவிளையாட்டில் அடிமையாகிபோயுள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர்.
இந்நிலையில் மும்பையில் 18வயது சிறுவன் தனது பெற்றோரிடம் பப்ஜி விளையாடுவதற்காக ரூ 37 ஆயிரம் மதிப்பிலான போனை வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு அவர்கள் பெற்றோர் மறுத்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுவன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு செல்போன் கேம் மீது உள்ள மோகம் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒருவரை அடியமையாக்கி வைத்துள்ளது.
தற்போது இந்த சிறுவனின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் பலர் மத்தியில் இந்த பப்ஜிக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .