பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டு பழங்குடி மக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பு ஒன்று கடந்த ஓராண்டாக தீவிர முயற்சிக்கு பின் இந்த இந்திய பழங்குடியினரை அமேசான் காட்டுக்குள் கண்டுபிடித்துள்ளனர். மேலாடை அணியும் வழக்கமில்லாதவர்களாக, எந்த மொழியையும் அறிந்திராதவர்களாக அவ்வளவு ஏன் தங்களுக்கென்று பெயர்கள் கூட இல்லாதவர்களாக அவர்கள் உள்ளனர். உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் பனையோலை வேய்ந்த குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை. உணவை தேடி நாடோடிகளாக வாழ்கிறார்கள். இவர்களை பாதுகாக்க அந்நாடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .