Saturday, February 9, 2019

உடலுக்குக் தினமும் #இந்த_நான்கு_மூலிகை_நீர் போதும்



உடலுக்குக் தினமும் #இந்த_நான்கு_மூலிகை_நீர் போதும்
பல்வேறு நலன்களையும் தரும்...

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை. ஷ...ரு

சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும்.கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.
#இதில்_அப்படி_என்ன_இருக்கிறது ?
அ)பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ)சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ)கங்களி இன்ன பிற மூலிகைகள். 
ஈ)வெட்டி வேர் உடலுக்குக் நன்மை தரக்கூடியது.

வெட்டி வேரினை விலாமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். கோடை காலத்தில் ஏற்படும் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால்  அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200  மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு  ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தார்களை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? 
அடிப்போம் ?

#பதினெண்_சித்தர்கள்_பிறந்த_பூமியல்லவா ? 
இந்த பொட்டலங்கள் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.

புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில்



புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகே,6 பழமையான ,அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவை அனைத்தும் மைலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.

கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்

மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் இங்கே…

சப்த சிவஸ்தலங்கள்:

1.ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்
2.ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்,
3.ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்,
4.ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்,
5.ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்,
6.ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்,
7.ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்.

இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த முறையிலேயே நாமும் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்போம்.

காரணீஸ்வரர்
1) ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்:

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

12 – ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீர்த்தபாலீஸ்வரர்
2) ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்:

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும்.

வெள்ளீஸ்வரர்
3) ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்:

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
வழிபடும் முறை

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை ‘கண் டாக்டர்’ என்றே கொண்டாடுகிறார்கள்.

விருபாக்ஷீஸ்வரர்
4) ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்:

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.
வாலீஸ்வரர்

5) ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்:

‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஶ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். 5-வதாக வழிபடவேண்டிய கோயில் இது.

மல்லீஸ்வரர்
6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்:

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 6-வதாக வழிபடவேண்டிய ஆலயம் இது.
கபாலீஸ்வரர்

7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்:

மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் நிறைவாக தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.

புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் 7-வதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், ‘மயிலையே கயிலை; கயிலையே மயிலை’ என்ற சிறப்பைப் பெற்றது போலும்.
மயிலையே கயிலை,ஓம் நமச்சிவாய

Monday, August 1, 2011

உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் !

என்று  ஒரு பெண் இரவில் தனியாக ஊருக்குள் நடமாட முடிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்றார் தேசப்பிதா .


பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது .

சமீபத்தில் போஸ்டன் நாளிதழில் உலகிலேயே பெண்களுக்கு அதிக தீங்கிழைக்கும் சில நாடுகளின் பட்டியல் வெளியானது .இப்போது அது உங்கள் பார்வைக்கு .

1 .ஆப்கானிஸ்தான்


பெண்களுக்கெதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு .மோசமான பொருளாதார சூழ் நிலைகள் சுகாதார சீர்கேடு போன்றவற்றால் இங்குள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் .

2 .காங்கோ


உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4  லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் .

3 .பாகிஸ்தான்


மத ரீதியான வன்முறைகள் ,திராவகம் வீச்சு பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது .குழந்தை திருமணங்கள் அதிகம் நிகழ்கின்றன .

4 .இந்தியா

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் கடத்தப் படுகிறார்கள் .கடந்த நூற்றாண்டில்  பாலியல் தொழிலுக்காக மட்டும் 50  லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் இவர்களில் 40  சதவீதம்பேர் பருவ வயதை எட்டாதவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம் .

5 .சோமாலியா



பெண்களுக்கெதிராக அதிக பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன .பெண் கல்வி ,சுகாதாரம் மிகவும் குறைவாக உள்ள நாடு .

பெண்களுக்கெதிரான இந்த தீமைகள் குறைந்தால்தான் உலகம் செழிக்கும் .

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் !


இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.


1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் : தகுதியில்லாதவர்களுக்கு  ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .


4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்றவேண்டும் .


6 . தரமற்ற வாகனங்கள்
 
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்யவேண்டும் .காலாவதியான அரசுப்பெருந்துகளை இயக்குவதை தவிர்க்கவேண்டும்

7 .பழுதடைந்த சாலைகள்
 
குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .
 
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .
8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .
 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு

9 .சாலைகள் வடிவமைப்பு
 
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களை கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும்
10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும் .
 டிஸ்கி :நான் அறிந்தவற்றை பகிர்ந்துள்ளேன் .புதிய ஆலோசனைகளை பதிவர்களும் வாசகர்களும் கருத்துரை மூலமாக அளிக்கலாம் .

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !

A \C  கார் பயன்படுத்துபவரா  நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C  ஐ  ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

எச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் !

உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள் வந்துள்ளன .
இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் .
நல்ல காரியங்களுக்கு பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது .இது குறித்து எச்சரிக்கவே இப்பதிவு .
கைக்கடிகாரத்தில் இரகசிய கேமரா
சிகரெட் லைட்டரிலும் உள்ளது 


அதி நவீன பேனா கேமரா


 தொப்பி வைக்க தொப்பியிலும் கேமரா 
இந்த கூலிங்கிளாசை போட்டிருப்பவர் எதை படமெடுக்கிறார்  என்பதை நீங்கள் அறிய முடியாது 

 டையிலும்   கேமரா 

 கூல் டிரிங்க்ஸ் ல் கேமரா 

 உங்களை கணக்கு பண்ண  கால்குலேட்டரில்

உங்களை படம் பிடித்து வளைக்க பெல்ட்டில் கேமரா


எச்சரிக்கை : விளையாட்டாகக்கூட கண்ட இடங்களிலும் நின்றுகொண்டு டெரராக பேசாதீர்கள்

1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா ?!

மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .

60வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .

1 .உலகின் முதல் நிலை தேடுதல் எந்திரமான கூகுள் 6,94,445 விசாரணைகளுக்கு பதிலளிக்கிறது .

 கூடுதல் தகவல் : இனி அதிக அளவில் தகவல்களை கூகுளிடம் விசாரணை செய்பவர்களிடம் கூகுள் குறுக்கு விசாரணை செய்யவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து  வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன !?


2 . 16,80,000,00 E mail கள் அனுப்பப்படுகின்றன .

கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

3 . 5,10,040 comment கள் Face book ல் வெளியாகின்றன .
கூடுதல் தகவல் :இவற்றில் 90 சதவீதம் கமெண்ட்கள் டெம்ப்ளேட் கமெண்டுகள் என்பதை  விக்கிலீக்ஸ் விரைவில் அம்பலப் படுத்த உள்ளதாக சுவீடனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

4 . 25  மணி நேரம் ஓடக்கூடிய 600  வீடியோ கிளிப்புகள் youtube  தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படுகின்றன .
கூடுதல் தகவல் :வழக்கம் போல பலான வீடியோக்கள்தான் அதிக அளவில் தரவேற்றம் செய்யப்படுவதாக பாரிசிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

5 . 3,70,000 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகள் Skype தளத்தின் மூலம் பகிரப்படுகிறது .
கூடுதல் தகவல் :இனி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓசியில் கதைப்பவர்களின் மைக் துண்டிக்கப்படும் என்று லண்டனிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன




டிஸ்கி :பிளாக்கர்கள் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .பிளாக்கர்களின் மன நலனை கருத்தில் கொண்டு கூகுள் அத்தகவலை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாமிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியத்னாம் - ஹாலாங்(1)

வணக்கம் நண்பர்களே.........இந்த முறை உங்களை அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......

இந்த இடத்துக்கு பேரு ஹாலாங்............இது ஒரு அழகான சுற்றுலாத்தலம்.......இங்க 1960 திட்டுக்கள் இருக்கு..........இது பல கனிமங்கள் இருக்கும் இடம்........ஆனால் இந்த அரசாங்கம் இந்த இடத்த பத்திரமான இடமாக பாதுகாத்திட்டு வருது..........


இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............


பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......


அமைதியான இந்த இடமும் சுற்றிலும் அழகான தோற்றமுடைய திட்டுக்களும் கண் கொள்ளாக்காட்சி........


ஹலோங்கில் இருக்கும் குகை மிக சிறப்பான ஒன்றாகும்.........பவழங்கள் இருக்கும் குகை இது.............பல போர் காலங்களில் இதன் உள் இருந்து கொண்டு சீனர்களை ஓட விட்டுள்ளனர்..........




இந்த படகில் வரும் வெளி நாட்டவர் இங்கு நீச்சலடிக்க மிகவும் விரும்புவர்........


பல நாட்டு மக்கள் வந்து போகும் இடம் இந்த ஹாலாங்............


படகுல வந்து வியாபாரம் பண்ணுவாங்க...............


இதுவரை வரலாறு.......இது தனி ஹிஹி!..........


தொடரும்.......

கொசுறு: என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது ரைட்டு.....சாரிபா!......படங்களுக்கு உதவிய Google லுக்கு நன்றி!

மனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் : அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு  காரணம் மனித மூளையின் சக்திதான் .
இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற  மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்)  தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள் .
ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது .
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .
நரம்பு உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்"  மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும்  மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார் .
மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள்  மூளையில்  இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை  பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால்  கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக  பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார் .
சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும்  (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .
இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .
இதைத்தான்  நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .
நன்றி : Dailymail ,UK.

அறிந்த விஷயமும் அறியாத செய்தியும்.......



வீரர்கள் மலையேற்றத்தின் போது முன்பக்கம் வளைந்தவாறு ஏறுவதும் இறங்குகையில் பின் பக்கம் சாய்ந்தவாறு இறங்குவதும் ஏன்?


நாம் நேராக நிற்கையில் (நிமிர்ந்து) புவி ஈர்ப்பு மையம் நமது இரு கால்களுக்கிடையே அமைந்து சரியான சமநிலையில் நிற்க முடிகிறது. சமதளத் தரையின் மீது நடக்கத் தொடங்கும்போது, புவி ஈர்ப்பு மையமும் நடக்கும் திசை நோக்கி நகர்கிறது.



இருப்பினும் அதன் சமநிலையில் மாற்றம் ஏதும் உண்டாவதில்லை. ஆனால், மலையேறும்போது புவி ஈர்ப்பு மையம் முன்னோக்கி இடம்பெயர்வதுடன் அதன் சமநிலையிலும் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இதனைச் சமன்செய்யும் பொருட்டு உடலை முன்னே சாய்த்து மலையின் மீது ஏறுகின்றனர்.



இதேபோன்று மலை மேலிருந்து கீழே இறங்கும்போது புவி ஈர்ப்பு மையமும் பின்பக்கம் இடம்பெயர்கிறது. சமநிலையிலும் வேறுபாடு நிகழ்கிறது. சரியான சமநிலைக்குக் கொணரும் பொருட்டு, பின்னோக்கிச் சாய்ந்தவாறு கீழிறங்கி வரவேண்டியுள்ளது.


***


தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி?


தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டுதான் தீயணைப்பு வீரர்களின் உடை தயாரிக்கப்படுகிறது.



இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சுக் கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம், ‘தீ’ எதிரொளிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவிதத் தடுப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது.



தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து இணி2 அதிகரிப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் தயாரிக்கப்படுகிறது.



***


மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?

ஆங்கிலத்தில் ‘ஹெயில் ஸ்டோன்ஸ்’ என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது.



பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம்.



***


ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஓசை பாலத்தைக் கடக்கும்போது மாறுபடுவது ஏன்?

ஒரு ரயில் அதன் பாதையில் செல்லும்போது மூன்று காரணங்களால் ஓசை உண்டாகிறது. முதலாவது தண்டவாளத்துக்கும் ரயிலின் சக்கரத்துக்கும் உள்ள உராய்வு.



இரண்டாவது இரண்டு தண்டவாளத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் சக்கரத்தினால் ஏற்படும் விளைவு.தண்டவாளத்தில் உள்ள ஸ்வீப்பர் கட்டைகள் ஜல்லிக் கற்களின் மீது நன்கு பதிக்கப்பட்டிருப்பதால் அதன் அதிர்வுகள் குறைகின்றன. அதன் ஓசையும் பூமியினுள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன.



ஆனால் பாலத்தின் மீது ரயில் செல்லும்போது இந்த ஸ்வீப்பர் கட்டைகளும் அதைத் தாங்குகிற தூண்களும் பூமியின் மீது பதிக்கப்படாததால் அதன் அதிர்வுகள் அதிகமாகி ஓசையும் அதிகரிக்கிறது.



உள்ளீடற்ற தன்மையாலும் அதிர்வு ஓசை தரையிலும் நீரிலும் எதிரொலிக் கப்படுவதாலும் ஓசை இன்னும் அதிகரிக்கிறது.


***


படித்ததில் பிடித்தது

***

கோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை !!!



இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும்


ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.



இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.



இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.



அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர்.



போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.



பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்



டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார்.



பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் பஞ்சாப் போன பின் சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்..

ஆழ்கடல் அதிசயம்

ஆழ்கடலின் ஆழம் காணலாம், ஆனால் அங்கு வாழும் உயிர்களின் முழுக்கணக்கு இன்னும் நமக்கு முழுமையாய் தெரியவில்லை. சமீபத்தில் 5000 மீ ஆழமுள்ள பிலிபைன்ஸ் கடலில் 2800 மீ-ல் பல அதிசய உயிரினங்களைக் கண்டுள்ளனர். ஆழ்கடல்தான் அனைத்து உயிரினங்களின் தொட்டில் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். காற்றாட கடற்கரையோரம் நடந்து பழகும் மனிதனின் ஆதி முன்னோர்கள் கூட அங்கிருந்து வந்தவர்களே! அறிவியல் பயணம் முடிவுறாத வண்ணம் இயற்கை பல அதிசயங்களை பல இடங்களில் ஒளித்து வைத்துள்ளது! சில ஆச்சர்யமான உயிர்களை படத்தொகுப்பாக கண்டு களியுங்கள்: